சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் 144 தடை உத்தரவைமீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

Added : மார் 26, 2020
Share
Advertisement
 பரமக்குடியில் 144 தடை உத்தரவைமீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

பரமக்குடி:உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்று முன்தினம் மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு 12:00 மணி முதல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என 21 நாட்களுக்கு தடை விதித்தார்.
இந்நிலையில், பரமக்குடியில் நேற்று போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் நகரை கொண்டு வந்தனர்.டி.எஸ்.பி., சங்கர் தலைமையில் தேவையின்றி நகரில் சுற்றிய டூவீலர் ஓட்டிகளை எச்சரித்ததுடன் 1 மணி நேரத்திற்கும் மேல் வாகனத்தில் சாவியைஎடுத்து வைத்தனர். மேலும் சிலருக்கு அபராதம் விதித்தனர்.தொடர்ந்து மீண்டும், மீண்டும் பிடிபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன ஓட்டிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்னர். பரமக்குடி, பார்த்திபனூர், சத்திரக்குடி, எமனேஸ்வரம், நயினார்கோவில் பகுதிகளில் போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X