சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி விற்பனை செய்த3,487 மது பாட்டில்கள் பறிமுதல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி 144 தடை உத்தரவை மீறி விற்பனைக்காக வைத்திருந்த 3,487 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் தடையை மீறி மதுபானங்கள் விற்கப்படுவதாக 94899 19722 என்ற அலைபேசியில் பல்வேறு புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வந்தது. இதையடுத்து வருண்குமார் எஸ்.பி., தனிப்படை அமைத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.அதன் பேரில் மாவட்டத்தில் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ராமநாதபுரத்தில் 428, பரமக்குடியில் 318, கமுதியில் 635, ராமேஸ்வரத்தில் 935, கீழக்கரையில் 492, திருவாடானையில் 140, முதுகுளத்துாரில் 300, ராமநாதபுரம் மது விலக்கு பிரிவினர் 125, கமுதி மதுவிலக்கு பிரிவினர் 113 மதுபான பாட்டில்கள் உட்பட 3,487 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இது போன்று அனுமதியின்றி மது விற்பனைக்கு துணையாக இருக்கும் அரசு டாஸ்மாக் கடை பணியாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும், என வருண்குமார் எஸ்.பி., எச்சரித்துள்ளார்.-முதுகுளத்தூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் முத்துகருங்கண் 62. கீழக்காஞ்சிரங்குளம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலரில் வைத்திருந்த 47 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பேரையூர் எஸ்.ஐ., தமிழ்ச்செல்வன் வழக்குப்பதிவு செய்து முத்துகருங்கண்ணை கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X