அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை ஒத்திவைப்பு சபாநாயகர் அறிவிப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை, துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், சட்டசபையை தேதி குறிப்பிடாமல், சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.சட்டசபையில், துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், மார்ச், 9ல் துவங்கியது. ஏப்., 9 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்திலும் பரவியதால், சட்டசபையை ஒத்தி வைக்க, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் மார்ச் 31ம்தேதி வரை, சட்டசபையை நடத்த தீர்மானிக்கப்பட்டது.இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும், 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டது. இதில், சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் இடம் பெற்றன. எனவே, 'சட்டசபையை ஒத்தி வைக்கவேண்டும்' என தி.மு.க., மீண்டும் வலியுறுத்தியது.இதை, அ.தி.மு.க., ஏற்கவில்லை. தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சட்டசபையை புறக்கணிப்பதாக, 23ம் தேதி அறிவித்தன. அன்று, சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில், 24ம் தேதி, அனைத்து துறை மானிய கோரிக்கைகள் மீது, ஒரே நாளில் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி, நேற்று, 27 துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.சட்டசபை உரிமை குழு, சட்டவிதிகள் ஆய்வுக்குழு உள்ளிட்ட, ஏழு குழுக்களின் பதவிகாலம் நீட்டிப்பு, தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு, அரசு பணிகளில் முன்னுரிமை வழங்குவது உள்ளிட்ட சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டன.பின்னர் தேதி குறிப்பிடாமல், சபையை ஒத்தி வைப்பதாக, சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X