முழு அடைப்பு அறிவித்த இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
 WHO, Video_Conference, UN, முழு அடைப்பு, இந்தியாவுக்கு, உலக சுகாதார அமைப்பு, பாராட்டு,  ஐ.நா., பாதுகாப்பு, கவுன்சில்

நியூயார்க்:'இந்தியா முழுவதும், 21 நாட்கள் முழுமையான ஊரடங்கிற்கு உத்தரவிட்டதன் மூலம், கொரோனாவுக்கு எதிரான போரில், விரிவான மற்றும் வலுவான நடவடிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி, முன்னெடுத்துள்ளார். 'இந்த போரை வெல்ல, இந்தியாவுடன், ஐ.நா., என்றும் துணை நிற்கும்' என, உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.


நடவடிக்கை

கொரோனா தொற்றுக்கு, உலகம் முழுவதும் உள்ள, 165 நாடுகளில், 4 லட்சத்து, 22 ஆயிரத்து, 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில், 562 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் பலியாகி உள்ளனர். இந் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், நேற்று முன் தினம் நள்ளிரவு, 12:00 மணி முதல், 21 நாட்களுக்கு, நாடு முழுவதும், முழுமையாக மூடப்படுவதாக, பிரதமர் மோடி அறிவித்தார்.

இது குறித்து, ஐ.நா.,வின் சுகாதார அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியாவுக்கான பிரதிநிதி ஹெங்க் பெக்டேம் கூறியதாவது:இந்தியாவில், கொரோனா பரவலை தடுப்பதற்காக, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது; பரிசோதனை கூடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ளது.தனிமைபடுத்தும் நடவடிக்கை அதிகரித்துள்ளது; மக்கள் ஒருவருக்கொருவர் விலகி இருக்கும் நடவடிக்கையாக, 21 நாட்களுக்கு, நாடு முழுவதும் ஊரடங்கிற்கு, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதற்கு, மக்கள் மத்தியில், பலத்த ஆதரவு பெருகி வருகிறது.

இந்த நடவடிக்கை, தொற்று பரவலை, நிச்சயம் கட்டுப்படுத்தும். கொரோனா போர்நோய் கண்காணிப்பு, பரிசோதனை மற்றும் ஆராய்ச்சிப் பணிகள், தொற்று தவிர்ப்பு மற்றும் பயிற்சி உள்ளிட்ட பணிகளில், இந்தியாவுடன் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா., இணைந்து செயல்பட்டு வருகிறது.கொரோனாவுக்கு எதிரான போரில், பிரதமர் மோடி, விரிவான மற்றும் வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்தப் போரில் வெல்ல, இந்தியாவுக்கு, ஐ.நா., உறுதுணையாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.


'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரம், முழுமையாக மூடப்பட்டுள்ளதை அடுத்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், வரலாற்றில் முதல் முறையாக, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், நேற்று முன் தினம் நடந்தது. இந்த கூட்டத்தில், மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நான்கு மணி நேரம் நடந்த இந்தக் கூட்டம், தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, அடிக்கடி தடைபட்டது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
26-மார்-202019:01:49 IST Report Abuse
அசோக்ராஜ் தெரிஞ்சு பொய் சொல்றாங்களா? தகவல் தெரியாம உளறுறாங்களா? கோவில்கள் மட்டும்தான் இவாக்குவேட் செஞ்சு மூடியிருக்காங்க. மஜூதி & சர்ச்சு வளாகங்கள் எப்பவும் போல்தான் இருக்கு. இது ஏன் உலக கவனத்துக்கு போகலை? முளு அடைப்பாமே ... முளு அடைப்பு ...
Rate this:
Cancel
26-மார்-202016:40:02 IST Report Abuse
ஆப்பு ஐயா உலக சுகாதார நிறுவனமே உங்க பங்குக்கு ஒரு 10000 போலூசை லத்தியோட அனுப்பி வையுங்க. இங்கே லத்தியால பேசுனாத்தான் கேக்குறாங்க. அப்பிடியே தெலங்காணாவுக்கு ஒரு ஆயிரம் போலூசை அனுப்புங்க...வெளியே வர்ரவங்களை சுட்டுத்தள்ள...
Rate this:
Cancel
26-மார்-202016:40:02 IST Report Abuse
ஆப்பு ஐயா உலக சுகாதார நிறுவனமே உங்க பங்குக்கு ஒரு 10000 போலூசை லத்தியோட அனுப்பி வையுங்க. இங்கே லத்தியால பேசுனாத்தான் கேக்குறாங்க. அப்பிடியே தெலங்காணாவுக்கு ஒரு ஆயிரம் போலூசை அனுப்புங்க...வெளியே வர்ரவங்களை சுட்டுத்தள்ள...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X