காட்டுத்தீ பலி 4 ஆக உயர்வு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டுத்தீ பலி 4 ஆக உயர்வு

Added : மார் 26, 2020
Share

போடி தேனி மாவட்டம் போடி அருகே உச்சலுாத்துமெட்டு வனப்பகுதி காட்டுத் தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்தவர் விஜயமணி 46. இவரது மகள் ஜெய் ஸ்ரீ 23. இவரது மகள் கிருஷ்யா 2. கல்பனா 45, மகேஸ்வரி 31, மஞ்சுளா 31, வஜ்ரமணி 40, லோகேஷ் 22, முத்தையா 60 ஆகியோர் கேரளாவில் உள்ள பேத்தொட்டிக்கு தோட்ட வேலைக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் மாலை ஊருக்கு புறப்பட்டனர்.தேனி மாவட்டம் போடிமெட்டில் 'கொரோனா' பரிசோதனையில் தாமதம் ஏற்படும் எனவும், 144 தடை உத்தரவால் 6:00 மணிக்கு மேல் வாகனங்கள் இயங்காது என்பதாலும், பேத்தொட்டியிலிருந்து உச்சலுாத்துமெட்டு வனப்பகுதியின் வழியாக ராசிங்காபுரத்திற்கு நடந்தே வந்துள்ளனர். வழியில் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் விஜயமணி, கிருஷ்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். வனத்துறை, போலீசார், தீயணைப்பு துறையினர் பலத்த காயம் அடைந்தவர்களை மீட்டனர். வழியில் மகேஸ்வரி பலியானார். போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மஞ்சுளா நேற்று காலை இறந்தார். போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X