பொது செய்தி

இந்தியா

கிளப்புறாங்கய்யா...

Added : மார் 26, 2020
Share
Advertisement

இப்படியும் ஒரு உற்சாகம்

வீடுகளில் சுய தனிமையில் இருத்தல் பலருக்கு வாழ்க்கையை நேசிப்பதற்கான மாற்றமாக உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஜெர்மி கோகென் தனிமை நேரத்தை பயன்படுத்திய விதம் தான் தற்போது வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பக்கத்து வீட்டு மாடியில் பெண் ஒருவர் நடனமாடுவதை கண்ட ஜெர்மி அவருக்கு கை அசைக்க பதிலுக்கு பெண்ணும் கையசைத்துள்ளார். உடனே ஜெர்மி டிரோன் மூலம் தனது நம்பரை அப்பெண்ணுக்கு அனுப்ப ஒரு மணி நேரத்தில் அந்த பெண்ணும் மெசேஜ் அனுப்பியுள்ளார். இவை அனைத்தையும் வீடியோவாக வலைதளத்தில் வெளியிட சில மணி நேரங்களில் பலரின் லைக்குகளை பெற்றுள்ளது.எளிய மக்களுக்கு உதவலாம்

இப்போதிருக்கும் கடினமான சூழலை அனைவரும் இணைந்து கடந்தாக வேண்டும். இதை உணர்ந்த காஷ்மீர் புத்தக விற்பனை நிறுவனம் ஒன்று கொரோனா தனிமை மையங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்கியுள்ளது. இதேபோல் டார்ஜிலிங் பேக்கரி நிறுவனம் ஒன்று கூலி வேலை செய்யும் மக்களுக்கு தினமும் இலவசமாக பிரட்டுகளை வழங்குகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள எளிய மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்வோம் என வலியுறுத்தியுள்ளனர்.

இன்றைய ராசி பலன்

'கொரோனா' பரவி வரும் நிலையில் மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என்பதை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மும்பை போலீசார் தனது அதிகாரப்பூர்வ 'டுவிட்டர்' பக்கத்தில் அனைத்து ராசிகளுக்குமான தினசரி கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் எல்லா ராசிக்கும் 'உங்கள் வீடுகளில் நேரத்தை கழிப்பீர்கள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 'இந்த கணிப்பை நீங்கள் பின்பற்றினால் எப்போதும் நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்' என்ற கேப்சனும் பதிவிடப்பட்டுள்ளது.
வீடியோகாலில் திருமணம்

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாட்னாவை சேர்ந்த இஸ்லாமிய ஜோடிக்கு வீடியோகால் மூலம் திருமணம் செய்ய இரு குடும்பத்தாரும் முடிவு செய்தனர். இதன்படி அவரவர் வீடுகளிலிருந்தே வீடியோகாலில் மதகுரு தலைமையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. 'கொரோனா' வைரஸ் சங்கிலியை உடைக்க எல்லோர் முயற்சிக்கும் வெற்றியுண்டு என இணையதளவாசிகள் வாழ்த்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X