அரசியல் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கரூர், :''அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்'' என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார்.இதில் பங்கேற்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:அத்தியாவசியப் பணிகளுக்கு வரக்கூடிய பணியாளர்களுக்கு அடையாள அட்டை கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள் 294 பேர்; வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் 87 பேர் என 381 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. பிற மாவட்டங்களில் இருந்து கரூருக்கு வரும் 18 எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. நகரம் கிராமப்பகுதிகளிலிருந்து வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களுக்குச் சென்று வந்திருந்து உரிய மருத்துவப் பரிசோதனை செய்யாமல் இருப்பவர்கள் குறித்த தகவலை சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் கலெக்டர் அலுவலகத்தில் 04324 -1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ 04324- 256306 -255340 ஆகிய எண்களிலோ மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைக்கு 104 என்ற எண்ணிலோ தெரிவிக்கலாம். அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு தேவைக்கு ஏற்ப அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் தனியாக சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X