பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாநிலம் சென்று வசிக்கும் வேடசந்துார் மக்கள் வருகை

Added : மார் 26, 2020
Share
Advertisement

வேடசந்துார்:வெளிமாநிலங்களுக்குச் சென்று பிழைப்பு நடத்தும் வேடசந்துார் பகுதி பொதுமக்கள் பலரும் கொரோனா பாதிப்பால் ஊர் திரும்பி வருகின்றனர்.
வேடசந்துார், ஒட்டன்சத்திரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பேர் கேரள, ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி சென்றுள்ளனர். 1980 - -90 களில் இவ்வாறு பலர் வெளிமாநிலங்களில் பல்வேறு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.விவசாயம், தொழிற்சாலைகள், பைனான்ஸ் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உலகை அச்சுறுத்தும் கொரோனாவின் கொடூர தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. அனைத்து மாநிலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் பிறமாநிங்களில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இவர்களில் வேடசந்துார் பகுதியினரும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு வருகின்றனர். கொரோனா தாக்கம் அதிகரிக்காமல் இருக்க, ஊர்திரும்பியவர்கள் தங்களது வீடுகளிலேயே இருக்கவேண்டும் என்பதே பலரின் வலியுறுத்தலாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X