பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு மீட்டர் இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிங்க... கடைக்காரர்கள் வலியுறுத்தல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள், ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று வாங்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
கொரோனா பரவலை தடுக்க, தமிழகம் முழுவதும் நேற்று (மார்ச் 24) மாலை 6:00 மணி முதல் ஏப்.1 காலை 6:00 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், இறைச்சி, ரேஷன் மற்றும் மருந்து கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள், உணவு, மருந்து வாங்க செல்வோர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்று வாங்க வேண்டும்.நெருக்கமாக நிற்கும் போது வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளதால் இதனை கடைக்காரர்களே வலியுறுத்துகின்றனர். இதற்காக, உழவர் சந்தை, காய்கறி, மளிகை கடைகளின் முன்பாக மாநகராட்சி சார்பில் வெள்ளை கோடால் வட்டமிட்டுள்ளனர். அருகில் கைகழுவ தண்ணீர், சோப் ஆயில் கட்டாயம் வைக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தினர்.
புகார் கொடுக்க வருவோரை போலீஸ் ஸ்டேஷனுக்குள் அழைத்து செல்ல வேண்டாம். வெளியே வைத்து மனுவை வாங்க வேண்டும். அவ்வாறு வருவோரை முதலில் சோப் அல்லது கிருமிநாசினி கொண்டு கைகழுவ சொல்ல வேண்டும். புகார் கொடுக்க வருபவர்கள் போலீசாரிடம் இருந்து ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். பணியில் இருக்கும் அனைத்து போலீசாரும் பேஸ் மாஸ்க் அணிய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை கழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X