பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் அம்மா உணவகம் செயல்படும்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் அம்மா உணவகத்தில் காலை, மதியம் உணவு தடையில்லாமல் வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
எளிய மக்களின் பசி தீர்க்க, தமிழகம் முழுவதும் 2013 ல் அம்மா உணவகம் துவங்கப்பட்டன. காலையில் ரூ.1 க்கு இட்லி, சாம்பார், மதியம் ரூ.5 க்கு சாம்பார் சாதம், ரூ.3 க்கு தயிர் சாதம் வழங்கப்படுகிறது. ஆதரவற்றோர், ஏழை மக்கள் பலர் இந்த உணவங்களில் சாப்பிட்டு பசியாறி வருகின்றனர். திண்டுக்கல்லில் நகர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எதிர்புறமும், அரசு மருத்துவமனை வளாகத்திலும் அம்மா உணவகங்கள் செயல்படுகிறது. தினமும் ஏராளமானோர் உணவருந்துகின்றனர்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், தமிழகம் முழுவதும் நேற்று (மார்ச் 24) மாலை 6:00 மணி முதல் ஏப்.1 காலை 6:00 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதனால் அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளது.பார்சல் முறையில் உணவுகள் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள் ளது. இருப்பினும் பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்படும் என்பதால், வழக்கம் போல் அம்மா உணவகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்கள், வெளியூரில் இருந்து பணியாற்றுபவர்கள் பசியாற தினமும் காலை 6:00 மணி முதல் இட்லி, காலை 11:00 மணி முதல் சாம்பார், தயிர் சாதம் கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X