பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கோட்டையில் சப் கோர்ட்

Added : மார் 26, 2020
Share
Advertisement

நிலக்கோட்டை:நிலக்கோட்டையில் சப் கோர்ட் அமைக்கப்படும் என சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் 25 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நிலக்கோட்டையில் சப் கோர்ட் அமைக்க வேண்டும் என 25 ஆண்டுகளாக வழக்கறிஞர் சங்கம், பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக அதற்காக இடம் தேடி வந்தனர். ஆயினும் சப் கோர்ட்டிற்கான அனுமதி கிடைக்காததால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில் நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில் சட்டத்துறை அமைச்சர் சண்முகம், நிலக்கோட்டையில் சப் கோர்ட் அமைக்கப்படும் என அறிவித்தார். இதனால் வழக்கறிஞர் சங்கம், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிலக்கோட்டையில் சப்கோர்ட் அமைந்தால் செக், சொத்து வழக்கில் விசாரணை வரம்பு ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கும். விபத்து வழக்கில் இறப்பைத் தவிர காயங்கள் குறித்தான வழக்கு, விவாகரத்து ஜீவனாம்ச வழக்கு, சிவில் வழக்கில் கூடுதல் தகவல் கேட்டல் வழக்கு உள்ளிட்டவற்றை நிலக்கோட்டையிலேயே தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X