பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானலில் 14 பேர் கண்காணிப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

கொடைக்கானல்:கொடைக்கானல் மலைப்பகுதியில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்திற்கு சென்று வந்த 14 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர்.
சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருவது வழக்கம். உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க கடந்த வாரம் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன.இதையடுத்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று வந்தவர்களை பரிசோதனைக்கு பின்னரே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கின்றனர். கே.சி.பட்டி, பூலத்தூர், அடுக்கம், பேத்துப்பாறை, வடகவுஞ்சி, கடமன்ரேவு, பி.எல்.செட் பகுதியில் சுகாதார துறையினர் சோதனையில் கண்டறியப்பட்ட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X