சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு எதிரொலி: வெறிச்சோடிய தெருக்கள்: வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் அறிவுரை

Added : மார் 26, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ஊரடங்கு உத்தரவை மீறி, வாகனங்களில் சென்றவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க, நேற்று முன்தினம் (மார்ச் 25) மாலை 6:00 மணி முதல் ஏப்.1 காலை 6:00 மணி வரை, தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட் டது.இதைத்தொடர்ந்து, மக்கள் பாதுகாப்பு கருதி பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்.14 வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால், அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள், ரேஷன் உள்ளிட்ட பொருட்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் காய்கறி, மளிகை, மீன், இறைச்சிக் கடைகள், மருந்தகங்கள், பால் மற்றும் ரேசன் கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் மார்க்கெட், மளிகைக் கடைகளில் குவிந்தனர்.கொரோனா பரவலை தடுக்க, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தேவையில்லாமல் டூவீலர், காரில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் மடக்கி அரை மணி நேரம் காக்க வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
சுகாதார பணியாளர்கள் மூலம் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே நிலையம், அரசு அலுவலங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட் டது.ஊரடங்கு செய்தி:வடமதுரை, அய்யலுார், எரியோடு மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் மளிகை, மருந்து, காய்கறி, பால், இறைச்சி கடைகள் மட்டும் திறந்திருந்தன. பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே தங்கியிருந்தனர். முக்கிய ரோடுகளில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவசியமின்றி இருசக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X