சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நேரத்தில் ஊர் சுற்றினால் வாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுவதால், அதனை மீறி திண்டுக்கல்லில் டூவீலர், காரில் ஊர் சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க, நேற்று (மார்ச் 25) நள்ளிரவு 12:00 மணி முதல் ஏப்.14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டம், மாநிலங்களுக்கு இடையே எல்லைகள் மூடப்பட்டுள்ளது. அரசு, தனியார் பஸ்கள், வாடகை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவைக்காக அத்தியாவசிய பொருட்களின் கடைகள் பகுதி நேரமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.வாகனம் பறிமுதல்ஊரடங்கு உத்தரவை மீறி, பலரும் டூவீலர், காரில் கடைகள், மருத்துவமனைக்கு செல்வதாக கூறி வாகனங்களில் ஊர் சுற்றுகின்ற னர்.அவ்வாறு செல்லும் வாகன ஓட்டிகள் டூவீலாக இருந்தால் 3 பேர், காராக இருந்தால் 5 அல்லது 6 பேரை ஏற்றிச் செல்கின்றனர். ஒன்று கூடுதலை தடுக்கவே இந்த உத்தரவு பிறக்கப்பிட்டுள்ளது. ஆனால் விழிப்புணர்வு இல்லாத வாகன ஓட்டிகளால் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார், சுகாதார பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.இன்று (மார்ச் 26) முதல் தேவையில்லாமல் டூவீலர், காரில் தெருவை வலம் வந்தால் கட்டாயம் வாகனம் பறிமுதல் செய்யப்படும். போலீசார் தடுத்து நிறுத்தி விசாரிக்கையில் உண்மையை சொல்ல வேண்டும். இல்லாவிடில் வழக்கு பதிவு செய்வதோடு, வாகனமும் பறிமுதல் செய்யப்படும். அவசியத்திற்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X