பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு அடையாளமாக 'சீல்'

Added : மார் 26, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் சுகாதாரத்துறை மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் அடையாளமாக கையில் 'சீல்' வைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு அறிகுறி இருக்கிறதோ, இல்லையோ அனைவரையும் ரத்த பரிசோதனை செய்து அனுப்பி பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர். இவர்களை குறைந்தபட்சம் 14, அதிகபட்சம் 28 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கின்றனர்.கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், எச்சரிக்கை கொடுக்கும் விதமாகவும், தனிமைப்படுத்தப்பட்டோர் வீட்டுக் கதவுகளில் 'கொரோனா ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது. இவ்வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 170 பேர் வீடுகளில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.அடையாள சீல்தற்போது இவர்களின் கைகளில் 'சீல்' வைக்கப்படுகிறது. அதில் 'தமிழக மக்களை பாதுகாப்பதில் பெருமிதம் அடைகிறேன். ஏப்.18 வரை வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தேதி வரை அவர்கள் வெளியே வரக் கூடாது. மீறி வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும். இந்த சீல் அழியாமல் இருக்க அரசு சார்பில் பிரத்யேக மை தயாரிக்கப்படுகிறது.இந்த மை 28 நாட்கள் அழியாமல் இருக்கும். அவர்களிடம் இருந்து உறுதி மொழி பத்திரமும் எழுதி வாங்கப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்தவரோடு தொடர்பில் இருப்பவரையும் கண்காணித்து பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X