சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடையை மீறிய டூவீலர்கள் பறிமுதல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

மதுரை: மதுரை சப்டிஷனில் 144 தடை உத்தரவை மீறி கொரோனா வைரஸை பரப்பும் நோக்கத்துடன் வெளியே சுற்றிக்கொண்டிருந்த 18 பேரின் டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மதுரை தாசில்தார் நகர் விஜய நாகேந்திரன் 40, எல்லீஸ் நகர் ஈஸ்வர பாண்டியன் 19, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மகள் மாயம்: தந்தை தற்கொலை
வாடிப்பட்டி: டி.மேட்டுப்பட்டி மீனாட்சிசுந்தரம் 43. கூலி தொழிலாளி. இவரது மகள் நேற்று முன்தினம் 12ம் வகுப்பு தேர்வு எழுத சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் மீனாட்சிசுந்தரம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பால் வியாபாரி தற்கொலை
சோழவந்தான்: மன்னாடிமங்கலம் இளஞ்செழியன் 44. பால் வியாபாரி. மனைவி, மகள் உள்ளனர். நேற்று காலை பேட்டை வைகை ஆற்றுப்பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மது விற்றவர்கள் கைதுபேரையூர்: மெய்யனுாத்தம்பட்டி சுந்தரமூர்த்தி 37. ஊரில் மது விற்றவரை கைது செய்து 146 மதுபாட்டில்கள், ரூ.12,280ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். பெருங்காமநல்லுாரில் சிவசாமி 49, டூவீலரில் 50 மதுபாட்டில்களை கொண்டு சென்றபோது போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X