பொது செய்தி

தமிழ்நாடு

எங்களுக்கும் சிறப்பு ஊதியம் வேண்டும்கேட்கும் '108'ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

மதுரை:கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், சுற்றுப்புறத்தை பராமரிக்கும் துாய்மை பணியாளர்களுக்கு ஒருமாதம் சிறப்பு ஊதியத்தைஅரசு அறிவித்தது.
அதே போல் '108' ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.'108' அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் இருளாண்டி கூறியதாவது: தமிழகம் முழுவதும் 970 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. 5,200 ஊழியர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளோம். கொரோனா பாதித்த இந்த சூழலில் நாங்களும் நோயாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவுகிறோம்.எங்கள் பணியையும் அரசு அங்கீகரித்து சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். நோய் பரவாமல் தற்காத்து கொள்ள முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி போதுமான அளவு இல்லை. இதையும் எங்களுக்கு போதுமான அளவு வழங்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X