பொது செய்தி

தமிழ்நாடு

குன்றத்தில் கிருமி நாசினி

Added : மார் 26, 2020
Share
Advertisement
 குன்றத்தில் கிருமி நாசினி

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றத்தில் நேற்று கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் எதிரொலியாக மாநகராட்சி, தீயணைப்பு துறை சார்பில் கோயில் மண்டபங்கள், தினசரி சந்தை, அம்மா உணவகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது.மாநகராட்சி கமிஷனர் விசாகன் உத்தரவுபடி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ், உதவி பொறியாளர் முருகன் தலைமையில் இப்பணி நடந்துது.
ஹார்விபட்டி நுழைவு பகுதி, திருநகர் 3வது பஸ் ஸ்டாப் உள்ளிட்ட நுழைவு பகுதிகளில் போலீசார் தடுப்பு அமைத்து மற்ற பகுதியிலிருந்து வருவோருக்கு அனுமதி மறுத்தனர். இதனால் கிராமப்பகுதிகளில் இருந்து குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு செல்லமுடியாமல் பலரும் தவித்தனர்.அலங்காநல்லுார்அலங்காநல்லுார், பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. செயல் அலுவலர்கள் தனபால், ஜெயமுருகன், இளநிலை உதவியாளர்கள் அங்கயற்கண்ணி, துாய்மை பணி மேற்பார்வையாளர் கனகராஜ், வாசிமலை, வரி தண்டலர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் துண்டு பிரசுரம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X