பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பாக தங்கியுள்ள 4,000 தபால் ஊழியர்கள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

மதுரை:கொரோனா தீவிரமாக பரவும் நிலையில் பிரதமரின் அறிவுரைப்படி வீட்டில் பாதுகாப்பாக இருப்பதாக தபால் ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்க தென்மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கிய சூழலில் தபால் போக்குவரத்திற்கும் வாய்ப்பு இல்லை. இந்நிலையில் நாங்கள் பணிக்கு வந்தாலும் எவ்வித பலனும் இல்லை.இதுகுறித்து நேற்று முன்தினம் எங்கள் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் வழங்கி விட்டோம். அதன்படி நேற்று முதல் மதுரையில் 750, தென் மண்டல அளவில் 4000 ஊழியர்கள் வீட்டில் இருக்கிறோம். தபால் அலுவலகங்களும் செயல்படவில்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X