தமிழ்நாடு

அமைப்பு! மதுரையில் மேலும் 2 கொரோனா வார்டுகள்....40 படுக்கைகளுடன் செயல்பாட்டுக்கு வந்தன

Added : மார் 26, 2020
Share
Advertisement
 அமைப்பு! மதுரையில் மேலும் 2 கொரோனா வார்டுகள்....40 படுக்கைகளுடன் செயல்பாட்டுக்கு வந்தன

மதுரை:மதுரையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைய துவங்கியதால் புதிதாக 40 படுக்கைகளுடன் மேலும் இரு கொரோனா வார்டுகள் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு ஜனவரி மாதமே கொரோனா வார்டு(எண் 120) துவங்கப்பட்டது. உயிர் காக்கும் கருவிகளுடன் 20 படுக்கை வசதி உள்ளது. 10 பேருக்கும் மேல் அறிகுறியுடன் சிகிச்சை பெறுகின்றனர்.கொரோனா பாதிப்பால் இறந்த மதுரை அண்ணாநகர் கட்டட ஒப்பந்தக்காரர் மூலமும், அவருக்கு பரப்பிய நபர் மூலமும் இன்னும் பலர் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக மேலும் இரு கொரோனா சிகிச்சை வார்டுகள் துவங்கப்பட்டுள்ளன. இங்கு தலா 20 வீதம் 40 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
டீன் சங்குமணி கூறுகையில், ''புதிய வார்டுகளுடன் அறிகுறி உள்ளோரை தனிமைப்படுத்தும் மையங்களும் அமைக்கிறோம். தேவையான மருந்து, மருத்துவ உபகரணங்கள் கைவசம் உள்ளன.சிகிச்சையளிக்கும் டாக்டர், நர்ஸ், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பிற்காக 'என் 95 மாஸ்க்' மட்டும் 40 ஆயிரம் இருப்பு உள்ளது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X