பொது செய்தி

தமிழ்நாடு

பண்ணையார் ஆர்ச் புதுப்பிக்க முட்டுக்கட்டை: பொது நல வழக்கால் நகராட்சி நிர்வாகம் ஆத்திரம்

Added : மார் 26, 2020
Share
Advertisement
 பண்ணையார் ஆர்ச் புதுப்பிக்க முட்டுக்கட்டை: பொது நல வழக்கால் நகராட்சி நிர்வாகம் ஆத்திரம்

ராஜபாளையம்:ராஜபாளையம் பண்ணையார் ஆர்ச் எனப்படும் சுதந்திர தின நினைவு வளைவு கட்டுமான பணிகள் தனியார் அமைப்பால் நடந்தநிலையில் இதை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கான சரியான காரணம் தெரிவிக்காதநிலையில் மழலையர் பள்ளி முன் குப்பை தொட்டி வைத்த விவகாரமே இதற்கான காரணம் என மக்களால் நகராட்சி நிர்வாகம் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.ராஜபாளையம் முடங்கியாறு மெயின் ரோட்டில் சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் பழமை வாய்ந்த அலங்கார நுழைவு வளைவுஇருந்தது. 83 ஆண்டுகளை கடந்து நின்ற நிலையில் கடந்தாண்டு ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தினரால் புதுப்பிக்கப்பட்டது. இதனிடையே கடந்தாண்டு டிசம்பரில் லாரி மோதிய விபத்தில் வளைவு நொருங்கி விழுந்தது.இடிபட்டஇதை புதிதாக எழுப்பும் பணிகளை கடந்த மூன்று மாதமாக மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் மேற்கொண்டது. இதற்காக பிரதான ரோட்டில் தடுப்பு ஏற்படுத்திய நிலையில் பழமையான அடையாளம் மீட்கப்படுவதை எண்ணி அப்பகுதி பொது மக்களும் மாற்றுப்பாதையை உபயோகித்து வந்தனர்.தற்போது 95 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் கடந்த 21 முதல் பணிகளை நிறுத்தி உள்ளனர். பணிகள் தொடங்குவது பற்றி முறையான மனு வழங்கவில்லை என காரணம் தெரிவித்துள்ளனர்.
பூமி பூஜை முதல் பாதைகள் தடுப்பு ஏற்படுத்தி கட்டுமானம் தினமும் நடைபெற்று வந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்துக்குதெரியாமல் கட்டுமானம் நடைபெற்றது என ம்ககள் கேள்வி எழுப்புகின்றனர். வீணாண காரணம் கூறுவதை விட்டு பணிகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ராஜபாளையம் நற்பணி மன்ற தலைவர் ராம்ராஜ், ''ராஜபாளையத்தில் நினைவு வளைவினை புதுப்பித்த சில மாதங்களில் விபத்து ஏற்பட மறு கட்டுமான பணி மூலம் மீட்டுள்ளோம்.ரூ. 12 லட்சம் செலவில் பொலிவு பெற்றுள்ள கட்டட பணி முடிவு பெறும் நிலையில் தற்போது தடை ஏற்பட்டுள்ளது. தொடங்கும் போது பொறுப்பு கமிஷனராக இருந்து தற்போது இன்ஜினியராக உள்ள நடராஜனிடம் கட்டுமான அமைப்பு, வரைபடம் என அனுமதியோடு மூன்று மாதங்கள் கடந்து 95 சதவீதம் பணி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போதைய நிர்வாகத்தினரின் திடீர் தடையானது மழலையர் பள்ளி முன்பு குப்பை தொட்டி வைத்ததை எதிர்த்து மேற்கொண்ட பொது நல வழக்கு காரணமாக உள்ளது. குழந்தைகளின் உடல் நலத்தை கவனத்தில் கொள்ளாமல் நகராட்சி செய்த செயலுக்காக பொது மக்களின் பங்களிப்பில் முடிவடைய உள்ள பணிகளுக்கு தடை ஏற்படுத்துவது ஏற்கதக்கதல்ல,''என்றார்.
ராஜபாளையம் நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள், ''கட்டட பணிகளுக்கான அனுமதி பெறவில்லை . இது பற்றிய விவரங்களை நகரமைப்பு அலுவலரிடம் கேட்டுக்கொள்ளவும்,''என்றார்.நகரமைப்பு அலுவலர் மதியழகன், '' ஏற்கனவே உள்ள பழைய கட்டுமான புதுப்பித்தல் பணிகளுக்கு கலெக்டர் அனுமதி வேண்டும். அத்துடன் கட்டடத்தின் உறுதி தன்மையை அறிய தாங்குதிறனுக்கான சான்றிதழ் இது வரை தரவில்லை. இதனால்தான் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுத்துள்ளோம். வேறு காரணம் இல்லை,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X