பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீவி., மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு தடை

Added : மார் 26, 2020
Share
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்;ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் பார்வையாளர்கள் வருவதற்கு தடை விதிக்கபட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக இங்கு தங்கி சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சை பெறுபவர்களை பார்க்க உறவினர்கள் அதிகளவில் வருகின்றனர். இதனால் மற்றவர்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும்பொருட்டு உள்நோயாளிகளை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் வருவதற்கு தடை விதிக்கபட்டுள்ளது. இதோடு உள்நோயாளிகளுக்கு உணவு மற்றும் உடைகள் கொண்டுவருவதற்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கபடுவார் என அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீவில்லிபுத்துார் கிளைச்சிறையிலிருந்த 20 கைதிகள் விடுவிக்கபட்டு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பபட்டனர். வத்திராயிருப்பு பேரூராட்சியில் செயல்அலுலர் கண்ணன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள், அரசு மருத்துவமனையில் கிருமிநாசினி தெளித்து துாய்மைபணி மேற்கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் காய்கறி மார்கெட்டிற்கு வழக்கம்போல் காய்கறி வரத்து இருந்தநிலையில் பல்வேறு காய்கறிகளின் விலை மிகவும் அதிகமாக இருந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். நோய்பரலை தடுக்க ஒவ்வொருவரும் தனித்து இருப்பது மிகவும் அவசியம் என்றநிலையில் ஊரடங்கின் முதல்நாளான நேற்று ஸ்ரீவில்லிபுத்துாரில் பஜார்வீதிகள் மற்றும் தெரு டீக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காாணபட்டது.  சுதந்திரமாக டூவீலர்களில் சுற்றி வந்தவர்களை போலீசார் கண்டித்து திருப்பி அனுப்பினர். ஆனாலும் நகரின் பல்வேறு தெருக்களில் இளைஞர்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X