சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நின்றிருந்த லாரி மீது ஆட்டோ மோதி இருவர் பலி

Added : மார் 26, 2020
Share
Advertisement

மயிலம் :சென்னையில் இருந்து ஆட்டோவில் வந்தபோது, மயிலம் அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் இறந்தனர்; ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். .
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.மாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் வடிவேல், 32; டிரைவர். இவர், தனது மனைவி சரண்யா, 28; மகள் தமிழ்கவி, 3; ஆகியோருடன் சென்னை, மடிப்பாக்கத்தில் தங்கியிருந்தார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில், சென்னையிலிருந்து தனது ஆட்டோவில் மனைவி, மகளுடன், வி.மாத்துாருக்கு வந்து கொண்டிருந்தார்.
வழியில், ஆவுடையார்பட்டை சேர்ந்த தனுசு மனைவி லட்சுமி, 45; அவரது மகன் செந்தமிழ், 20; மகள் முத்துலட்சுமி, 22; மயிலம் அடுத்த நெடிமொழியனுாரை சேர்ந்த ராஜேந்திரன், 60; ஆகியோரையும் அழைத்து வந்தார்.
மயிலம் அடுத்த சின்ன நெற்குணத்தில், லாரிகள் நிறுத்துவதற்கான இடத்தின் அருகே வந்தபோது, அங்கு சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாரஸ் லாரியின் பின்பக்கம் ஆட்டோ மோதியது. இதில், ஆட்டோவில் வந்த 7 பேரும் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த மயிலம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, அவ்வழியாக வந்த வாகனங்கள் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் வடிவேல் இறந்தார். மற்ற 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X