சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவிலிருந்து திரும்பிய 10 தஞ்சை மாவட்ட மீனவர்களை தேடும் போலீஸ்

Added : மார் 26, 2020
Share
Advertisement

தஞ்சாவூர் : கேரளாவிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்று, படகு மூலம் மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த, 10 மீனவர்கள் வந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தஞ்சாவூர், மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த ஒரு வாரத்துக்கு முன் கேரளாவிற்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில், கொரோனா எதிரொலியால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கேரளாவில் அதிக நபர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதால், கேளரா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன் போக்குவரத்து வசதி இல்லாததால், நேற்று முன்தினம் நள்ளிரவு படகு மூலம் கடல் வழியாக, மல்லிப்பட்டினம் வந்து உள்ளனர்.
அப்படி வந்தவர்கள் போலீசார், வருவாய்த்துறையினரிடம் தெரியப்படுத்தாமல், 10 மீனவர்கள் ஊரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, யார் அவர்கள் என விசாரணை மேற்கொண்டு, அவர்களை தேடி வருகின்றனர். இத்தகவலால், அப்பகுதி மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X