பொது செய்தி

தமிழ்நாடு

இலவம் பஞ்சு தேக்கம் விவசாயிகள் கவலை

Added : மார் 26, 2020
Share
Advertisement

வருஷநாடு:வருஷநாடு, முருக்கோடை, வாய்க்கால்பாறை, அருகவெளி, வாலிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரம் ஏக்கரில் இலவம் பஞ்சு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இவை பவானி, ஈரோடு, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு மெத்தை உள்ளிட்டவை தயாரிக்க விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது காய்ப்புக்கு வந்து பதம் பிரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள னர்.பதம் பிரித்து வைக்கப்பட்டுள்ள இலவம் பஞ்சுகளை வாங்குவதற்கு 'கொரேனா' பாதிப்பு காரணமாக, வியாபாரிகள் வரவில்லை. தற்போது ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது. இதனால் பஞ்சு மூடைகள் தேக்கம் அடைந் துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.வாலிப்பாறை விவசாயி காராமணி கூறியதாவது: கடந்தாண்டு மழை அதிகம் பெய்ததால் பாதிக்கப்பட்டு இலவம் பஞ்சு விளைச்சல் குறைவாக உள்ளது. 'கொரோனா' தாக்கத்தால் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் யாரும் வருவதில்லை. இதனால் பதம் பிரித்து வைக்கப்பட்டுள்ள இலவம் பஞ்சுகளை விற்பனை செய்யமுடியாமல் சிரமப்படுகிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X