சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவுக்கு கட்டட வேலைக்கு சென்ற கும்பகோணத்தைச் சேர்ந்த 36 பேர் தவிப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

தஞ்சாவூர் : கும்பகோணத்தில் இருந்து கேரளாவுக்கு கட்டட வேலைக்கு சென்ற, 36 பேர், மீண்டும் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
கேரளா மாநிலத்தில் கொரோனாவால் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் 144 தடை உத்தரவு மிக தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக - கேரளா எல்லைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. கடந்த, 20 நாட்களுக்கு முன், தஞ்சாவூர், கும்பகோணம் அருகே உள்ள பகுதிகளைச் சேர்ந்த, 20 பேர், கேரளாவின் கண்ணுார், கோழிகோடு பகுதிகளுக்கு கட்டட வேலைக்கு சென்றுள்ளனர். கேரளாவில் ஊரடங்கு மற்றும் தற்போது இந்தியா முழுவதும், 144 தடை உத்தரவால், அந்த, 20 பேரும் கடந்த சில நாட்களாக சாப்பிட வழியின்றி, தங்க சரியான இடமின்றி தவிக்கின்றனர். மேலும் ஊருக்கு வரமுடியாமலும் தவித்து வருகின்றனர். தவிர, கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த மேலும், 16 பேர், கோழிக்கோட்டில் உள்ளனர். அவர்களும் சொந்த ஊருக்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
அவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு (90725 19161)என்பவர் நமது நிருபரிடம் மொபைல் போனில் கூறுகையில், ''இங்கு உணவின்றி தவிக்கிறோம். சொந்த ஊருக்கு வரமுடியாத நிலை உள்ளது. இங்கு கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஆகையால் எங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அதன்பின் எங்களை சொந்த ஊரில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X