பொது செய்தி

தமிழ்நாடு

கம்பம் உழவர் சந்தையில் கூவியுது கூட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

Added : மார் 26, 2020
Share
Advertisement

கம்பம்:கம்பம் உழவர் சந்தையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் நுாற்றுக்கணக்கில் பொதுமக்கள் கூடி காய்கறிகளை வாங்க முட்டி மோதினர்.
'கொரோனா' தடுப்புக்காக மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமூக விலக்கம் என்பது தான் 'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்கும் முதல்படி என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதற்காக 144 தடை உத்தரவு, தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் அத்தியாவசிய தேவைகளான பலசரக்கு, காய்கறி, பால், மருந்து கடைகள் வழக்கம் போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கம்பம் உழவர் சந்தை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், நேற்றும்ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு வந்து காய்கறி வாங்கினர். கூட்டம் கூடக் கூடாது என்பது தான் பிரதான பிரசாரமாக உள்ளது. ஆனால் இங்கு தினமும் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்ததேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை.
எனவே மாவட்ட நிர்வாகம், கம்பம் உழவர் சந்தை விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதை தவிர்க்க குறிப்பிட்ட இடைவெளி விட்டு நிற்கச் செய்து வரிசை முறையை அமல்படுத்தலாம். உழவர்சந்தை அதிகாரிகள், சுகாதாரத்துறை துணை இயக்குனர், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X