பொது செய்தி

தமிழ்நாடு

லாரி டிரைவர்களுக்கு பரிசோதனை அவசியம்

Added : மார் 26, 2020
Share
Advertisement
கம்பம்;காய்கறி லாரி டிரைவர்கள் கேரளாவிலிருந்து திரும்பி வரும் போதுஅவர்களை தேனிமாவட்ட எல்லையில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.தமிழக -கேரள எல்லைகள் மூடப்பட்டுவிட்டன. ஆனால் அத்தியாவசிய தேவைகளான

கம்பம்;காய்கறி லாரி டிரைவர்கள் கேரளாவிலிருந்து திரும்பி வரும் போதுஅவர்களை தேனிமாவட்ட எல்லையில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.தமிழக -கேரள எல்லைகள் மூடப்பட்டுவிட்டன. ஆனால் அத்தியாவசிய தேவைகளான காய்கறி மற்றும் பால், தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு லாரிகளில் செல்கிறது. குறிப்பாக தினமும் காய்கறிகள் மட்டும் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவில் எர்ணாகுளம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.கேரளாவில் 'கொரோனா' பாதிப்பு உள்ளதால் அங்கு சென்று விட்டு, தமிழகம் திரும்பும் லாரி டிரைவர்களை, தேனி மாவட்ட எல்லைகளில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த வேண் டும். மேலும் அவர்கள் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர் என்று தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். லாரிகளில் கிருமிநாசினி தெளிப்பதை சுகாதாரத்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X