சுகாதாரப்பணியாளர்களுக்கு பிரத்யேக உடை: பாதுகாப்பான தூய்மைப்பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதாரப்பணியாளர்களுக்கு 'பிரத்யேக' உடை: பாதுகாப்பான தூய்மைப்பணி தீவிரம்

Added : மார் 26, 2020
Share
தேவாரம்:'கொரோனா' தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள் 'பிரத்யேக' பாதுகாப்பு உடை அணிந்து தீவிர துாய்மைப்பணி செய்கின்றனர். 'கொரோனா' வைரசின் சமூக பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டமாக நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய அரசு
 சுகாதாரப்பணியாளர்களுக்கு 'பிரத்யேக' உடை:  பாதுகாப்பான தூய்மைப்பணி தீவிரம்

தேவாரம்:'கொரோனா' தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள் 'பிரத்யேக' பாதுகாப்பு உடை அணிந்து தீவிர துாய்மைப்பணி செய்கின்றனர்.
'கொரோனா' வைரசின் சமூக பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டமாக நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய அரசு பணியில் இருப்பவர்கள் விடுப்பு எடுக்க தடை உள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கியிருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகள் துாய்மை பணியில் தீவிரம் காட்டகின்றன.நகரை துாய்மையாக வைத்திருக்க குடியிருப்பு பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பிற்கு பிரத்யேகமான உடை தயாரிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டுள்ளன.தடிமனானரப்பர் காலணி, பாதுகாப்பு முக கவசம், கையுறை அணிந்து கிருமி நாசினி தெளிக்கும் பணி நடக்கிறது. ஆனால் அவர்களை கண்காணிக்கும் மேஸ்திரிகளுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X