பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் இரு அரசு மருத்துவமனைகளை தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்ற முடிவு

Added : மார் 26, 2020
Share
Advertisement

கம்பம்:தேனி மாவட்டத்தில் கம்பம், போடி ஆகிய இரண்டு அரசு மருத்துவமனைகளை தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்ற சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை கம்பத்திலிருந்து தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள ஒருவர் மட்டுமே சிகிச்சையில் உள்ளார். வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 256 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர்.ஒருவேளை 'கொரோனா' பாதிப்பு அதிகமானால் அவர்களை தங்க வைத்து சிகிச்சையளிக்க தேனி மாவட்டத்தில் இரண்டு அரசு மருத்துவமனைகளை தயார்படுத்த முடிவு செய்துள்ளது. கம்பம் மற்றும் போடி அரசு மருத்துவமனைகள் இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள் ளது.கம்பத்தில் ஏற்கெனவே 11 படுக்கைகள் கொண்ட பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது.அதில் இரண்டு படுக்கைகள் வெண்டிலேட்டர் வசதியுடன் உள்ளது. தனிமை மையமாக மாற்றப்படுவதற்கான முதல் நடவடிக்கையாக, டாக்டர்கள்,செவிலியர்களை வீட்டுக்கு செல்லாமல் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் வளாகத்தில் உள்ள நோயாளிகள் உடன் வருபவர்கள் தங்கும் கட்டடம், டாக்டர்கள், செவிலியர்கள் தங்குவதற்கான தற்காலிக குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளது.அத்தோடு மருத்துவமனையின் மெயின் கேட் பூட்டப்பட்டு, சிறு சிறு உபாதைகளுக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் திருப்பிவிடப்பட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X