பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறி மூணாறில் கூடிய மக்கள்: எச்சரித்த சப்கலெக்டர்

Added : மார் 26, 2020
Share
Advertisement
 ஊரடங்கை மீறி மூணாறில் கூடிய மக்கள்: எச்சரித்த சப்கலெக்டர்

மூணாறு:மூணாறில் 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள தடை உத்தரவுகளை மீறி நேற்று அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்லமக்கள் அதிகம் திரண்டனர்.
கேரளா, இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் 'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மூணாறு உட்பட நான்கு கிராம நிர்வாகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனிடையே 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு பிறப்பித்தார்.அதனால் மூணாறைச் சுற்றிலும் தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு நிர்வாகம் நேற்று முதல் விடுமுறை அளித்தது.மூணாறில் புதன் கிழமைதோறும் மார்க்கெட் விடுமுறையாகும்.குவிந்தனர்: அதனையும், தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிச் செல்ல நேற்று மூணாறில் தொழிலாளர்கள் பெரும் அளவில் குவிந்தனர்.அதனை அறிந்து மூணாறுக்கு வந்த தேவிகுளம் சப் கலெக்டர் பிரேம்கிருஷ்ணன், வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆகியோரின் உதவியுடன் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு அறுவுறுத்தியதுடன், விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். பின்னர் மார்க்கெட் செல்லும் வழியை ஒரு வழிப்பாதையாக மாற்றி காய்கறி வாங்க சென்றவர்களை போலீசார் வரிசை படுத்திஅனுப்பி வைத்தனர்.
பயனில்லை
நகருக்குள் தேவையின்றி வாகனங்கள் நுழைவதை தடுக்கவும், ஜீப், ஆட்டோ ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்வதை கண்காணிக்கவும் நகரில் 3 இடங்களில் போலீசார் தடுப்புகளைஅமைத்தனர். இருப்பினும் தேவையின்றி அதிக வாகனங்கள் வந்து சென்றதால் தடுப்புகள் அமைத்தும் பயனின்றி போனது.அதிக விலை: மூணாறுக்கு தேவையான காய்கறிகள் தேனி, ஆண்டிபட்டி,உசிலம்பட்டி, உடுமலைபேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படு கிறது. உடுமலைபேட்டையில் இருந்து நேற்று காய்கறிகள் மினிலாரிகளில் தடங்கல் இன்றி கொண்டு வரப்பட்டு, அவை அதிக விலைக்கு விற்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X