பொது செய்தி

தமிழ்நாடு

எகிறியது காய்கறி விலை

Added : மார் 26, 2020
Share
Advertisement

போடி:'கொரோனா' தொற்று தடுக்க தமிழக அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவு நேற்றுமுன்தினம் மாலை அமலுக்கு வந்தது.
இதன் தொடர்ச்சியாக பிரதமர் அறிவித்த ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.எனினும் அத்தியாவசியமான காய்கறிகள், உணவுப்பொருகள், பால் விற்பனை கடைகள் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை மக்கள் சரியாக புரிந்துகொள்ளாத நிலையில் நேற்று முன்தினம் முதல் இக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. நேற்றும் அதிக கூட்டம் இருந்தது. சில காய்கறி வியாபாரிகள் இதனை பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதலாக குறிப்பாக கிலோ ரூ.60 க்கு விற்க வேண்டிய பீன்ஸ் ரூ.120 க்கும், ரூ.10 க்கு விற்க வேண்டிய தக்காளி ரூ.50, ரூ.60 க்கு விற்றனர். நடுத்தரமக்கள் வேறு வழியின்றி வாங்கி சென்றனர். கூலித்தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கூட்ட நெரிசலை தவிர்க்கவும், மாஸ்க் அணிவதற்கான விழிப்புணர்வையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X