மூன்று வாரங்களில் சரியாகிவிடும்: டிரம்ப் நம்பிக்கை

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
 மூன்று வாரங்களில் சரியாகிவிடும்: டிரம்ப் நம்பிக்கை

வாஷிங்டன், :அமெரிக்காவில், 'கொரோனா' வைரஸ் தொற்று, ஒரே நாளில், 10 ஆயிரம் பேருக்கு இருப்பது உறுதியாகி உள்ளது. பலி எண்ணிக்கையும், 800ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில், 'வரும், ஏப்., 12, ஈஸ்டர் தினத்துக்கு முன்பாக, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் இயல்புக்கு திரும்பும்' என, அதிபர், டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு, அமெரிக்காவில் மிக தீவிரமாக உள்ளது. நேற்று முன்தினம் மட்டும், 10 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும், ஒரே நாளில், 150 பேர் உயிரிழந்தனர்.


latest tamil newsஅங்கு, 54 ஆயிரத்து, 935 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. பலி எண்ணிக்கை, 784ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நியூயார்க் நகரில் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. அங்கு புதிதாக, 5,000 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும், 53 பேர் பலியாயினர். அதையடுத்து, நியூயார்க்கில் மட்டும் பலி எண்ணிக்கை, 210ஆகவும், தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 25 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது.நியூயார்க்கைத் தவிர, அதை சுற்றியுள்ள நியூ ஜெர்சி, கலிபோர்னியா, மிச்சிகன், இல்லினாய்ஸ், புளோரிடாவிலும், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளது.
இந்தாண்டு இறுதியில், அதிபர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், மக்களிடையே டிரம்ப் மீதான நம்பிக்கை, 50 சதவீதமாக குறைந்துள்ளது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீட்டெடுத்து, அதன் மூலம், மக்கள் நம்பிக்கையை பெறும் முனைப்பில், டிரம்ப் உள்ளார்.
நேற்று முன்தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, டிரம்ப் கூறியுள்ளதாவது:
அனைத்து தரப்பு மக்களும், சமூக விலக்கலை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும். வைரஸ் பரவலைத் தடுக்க கூறப்படும் அறிவுரைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். கண்ணுக்கு தெரியாத எதிரியை வெல்வதற்கு அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும்.
இதற்காக, ஒரு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வரும், ஏப்., 12ல், ஈஸ்டருக்கு முன்பாக, நாடு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் இயல்புக்கு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன். அதை செயல்படுத்தி காட்டினால், மிகப் பெரிய வரலாற்று வெற்றியாக அது அமையும். அடுத்து வரும், மூன்று வாரங்கள், நமக்கு முக்கியமானதாகும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

* புல்லட் வேகத்தில் பரவுகிறது

நியூயார்க் நகரில், வைரஸ் தொற்று மற்றும் உயிர் பலி அதிகரித்து வரும் நிலையில், நகர மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
'கொரோனா வைரஸ், புல்லட் ரயில் வேகத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு மூன்று நாட்களிலும், பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது' என, நியூயார்க் கவர்னர் ஆன்ட்ரூ கியூமோ வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசால் நிறுவப்பட்டுள்ள, கொரோனா தடுப்பு நடவடிக்கைக் குழுவும், நியூயார்க்கில் வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருவதற்கு கவலை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
27-மார்-202009:43:04 IST Report Abuse
Gnanam நல்லதே நடக்க வாழ்த்துக்கள். பொருளாதாரத்தை விடவும், மக்களின் நலம்தான் முக்கியமானது. கூடிய விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இறைவன் அருள் புரியட்டும்.
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
26-மார்-202010:06:50 IST Report Abuse
Arasu இஸ்ரேல் ஒரு நாடு போதும் சீனாவை அழிக்க ...
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
26-மார்-202009:57:58 IST Report Abuse
Arasu அமெரிக்கா ஐரோப்பா ,இஸ்ரேல் நாடுகள் இனைந்து...உடனடியாக சீனாவுடன் போர் புரிய வேண்டும்
Rate this:
Baskar - Madurai,இந்தியா
01-ஏப்-202002:27:24 IST Report Abuse
BaskarNo need to go for a war. Stop buying Chinese products and all the governments should not import and export. China will die....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X