பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் உணவு வழங்க ஏற்பாடு

Added : மார் 26, 2020
Share
Advertisement

காரைக்குடி:காரைக்குடியில் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களுக்கு, அம்மா உணவகத்தில் உணவு வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.காரைக்குடியில் வயதானவர்கள், ஊனமுற்றோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் என 50க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள் உள்ளனர். இவர்கள் உணவிற்காக மற்றவர்களை நம்பியே வாழ்கின்றனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், யாரும் வெளியில் வராத நிலையில், ஆதரவற்றோர்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு வழங்க பல சமூக ஆர்வலர்கள் முன்வந்தாலும் அவர்கள் வெளியே வர முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக, தாசில்தார் பாலாஜி, டி.எஸ்.பி., அருண், நகராட்சி ஆணையாளர் பொறுப்பு மாலதி ஆகியோர் ஆதரவற்றவர்களுக்கு, காரைக்குடி அம்மா உணவகத்தில் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X