பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிதி ஒதுக்க ஊராட்சிகள் கோரிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement

கடம்பத்துார் : ஊராட்சிகளில் போதிய நிதியுதவி இல்லாததால், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூடுதல் நிதி வழங்க வேண்டும் என, ஊராட்சி செயலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நிதியுதவி கடம்பத்துார் ஒன்றியத்தில், 43 ஊராட்சிகள் உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, ஊராட்சிக்கு போதிய நிதியுதவி வழங்காததால், வளர்ச்சி பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற முடியாமல் ஊராட்சி செயலர்கள் தவித்து வருகின்றனர்.இந்நிலையில், தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிந்து, உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஊராட்சிகளுக்கு போதிய நிதியுதவி வழங்கப்படாததால், அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், தற்போது, கொரோனா வைரஸ் ஊராட்சிகளில் பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஊராட்சி பகுதி களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என, ஒன்றிய அதிகாரிகள் செயலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.அதன்படி, ஊராட்சிகளில், கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கோரிக்கை:

இதற்கு போதிய நிதியுதவி இல்லாததால், ஊராட்சி பகுதி களில், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் கடும் சிக்கல் ஏற்ப்பட்டுஉள்ளது.மேலும், ஊராட்சி பகுதிகளில், மூன்று மாதங்களாக ஊராட்சி செயலர்கள், துப்புரவு பணியாளர்கள், பம்ப் ஆப்பரேட்டர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என, ஊராட்சி செயலர் ஒருவர் தெரிவித்தார்.இப்படி இருக்கும் போது, எங்களால் எப்படி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் ஊராட்சி செயலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம், ஊராட்சி பகுதிகளில், போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, ஊராட்சி செயலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X