பொது செய்தி

தமிழ்நாடு

தட்டுப்பாடு! 'கொரோனாவை' தடுக்க பாடுபடும் ஊழியர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் வழங்காமல் இழுத்தடிப்பு 

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் 'கொரானோ வைரஸ்' தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வருவாய்துறை அலுவலர்களுக்கு, சுகாதாரத்துறை நிர்வாகம் முகக்கவசம், சானிடைசர் வழங்காமல் இழுத்தடிப்பதாக, சங்கத்தினர் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் நோய் தடுக்கும் பேரிடர் பணியில் சுகாதாரம், மருத்துவம், போலீஸ் மட்டுமின்றி வருவாய்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.வருவாய்துறையினர் இதுமட்டுமின்றி சான்று வழங்கல், ரேஷன் கார்டு வினியோகம், முதியோர் உதவித்தொகை, வாக்காளர் பட்டியல் பணிகளையும் செய்து வருகின்றனர்.வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளை மட்டுமே செய்ய உத்தரவிடவேண்டும். அலுவலர்கள் எண்ணிக்கையையும் பாதியாக குறைத்து அலுவலகங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.சங்கத்தினர் வலியுறுத்தல்: தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தபூபாலன், செயலாளர் தமிழரசன் கூறியதாவது:வருவாய்துறை அலுவலகங்களுக்கு மக்கள் சான்று, ரேஷன் கார்டு பெற வந்த வண்ணம் உள்ளனர். அதற்கு தடை விதித்தால் கூட்டம் சேர்வதின் மூலம் நோய் தொற்று பரவுவது தவிர்க்கப்படும். மேலும், வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபடும் வருவாய்துறை அலுவலரின் பாதுகாப்பிற்கு முக கவசம், சானிடைசர் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளோம், என்றனர்.
ரூ.4க்கு முகக்கவசம்
திருப்புத்துார்: கொள்ளை நோய் தொற்றைக் கட்டுப்படுத்த நடத்தப்படும் ஊரடங்கைப் பயன்படுத்தி சிலர் கொள்ளை லாபத்திற்கு விற்க முயல்வதும் மக்கள் வேறு வழியில்லாமல் வாங்கிச் செல்வதும் பல ஊர்களில் பார்க்க முடிகிறது. திருப்புத்துாரில் மக்களுக்காக, குடும்பத்தினருடன் தனித்திருக்க முடியாமல், மக்களுக்காக பணியாற்றி வரும் போலீசாரிடம் கூட கூடுதல் விலைக்கு முகக்கவசம் விற்றதாக வந்த புகாரையடுத்து திருப்புத்துாரில்மருந்துக் கடை ஒன்றில் மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.திருப்புத்துார் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்ட முகக்கவசத் தட்டுபாட்டை சமாளிக்க அவர்களிடம் பணியாற்றும் மஸ்துார் துப்புரவுப் பணியாளரான தென்மாப்பட்டு பாண்டிச்செல்வி என்பவர் ரூ. 4 வீதம் 200 முகக்கவசங்களை தானே தையல் எந்திரத்தில் தைத்து கொடுத்து உதவியுள்ளார்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X