அ.தி.மு.க., நிர்வாகி ரூ.2 லட்சம் நிவாரண நிதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., நிர்வாகி ரூ.2 லட்சம் நிவாரண நிதி

Added : மார் 26, 2020
Share

முத்தியால்பேட்டை : கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட இளைஞரணி செயலர், கலெக்டரிடம் வழங்கினார்.

நாடு முழுவதும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, சுகாதாரத் துறை, பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில், தி.மு.க., தலைமை, கட்சியின் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்களின் ஒரு மாத ஊதியத்தை, நிவாரண நிதியாக வழங்க உள்ளது.அதேபோல், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., இளைஞரணி மாவட்ட செயலர் ரஞ்சித்குமார் என்பவர், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையாவிடம், நேற்று வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X