பொது செய்தி

தமிழ்நாடு

கடன் வசூலிப்பை சில நாட்கள் தளர்த்த வலியுறுத்தல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

பழவேற்காடு: மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் பெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்கள், 'கொரோனா'வால் சிறுதொழில் பாதிப்பு அடைந்து, வருவாய் இன்றி கிடப்பதால், நிறுவனங்கள் கடன் வசூலிப்பை சில நாட்கள் தளர்த்த வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

பழவேற்காடு பகுதிகளில், ஏராளமான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. இவர்களுக்கு, தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், சுயதொழில் செய்வதற்காக, வட்டிக்கு கடன் வழங்கி வருகின்றன.தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் கடன் தொகையை, வாரத் தவணையில் திரும்ப பெறுகின்றன.குழுக்களாக கடன் பெற்று, மீனவ பெண்கள் மீன் விற்பனை, கருவாடு தயாரிப்பு, காய்கறி, பழம் விற்பனை உள்ளிட்ட சிறுதொழில்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சில தினங்களாக கொரோனா அச்சுறுத்தலால் தொழில் பாதித்து வருவாய் இன்றி கிடக்கின்றனர்.அதேசமயம், கடன் கொடுத்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடன் வசூலிப்பில் கெடுபிடி காட்டி வருகின்றன.வருவாய் இல்லையென்றாலும் வாங்கிய கடனுக்கு தவணை கட்டித் தான் ஆக வேண்டும் என, அந்நிறுனங்கள் தீவிரம் காட்டுகிறது.

வருவாய் இல்லாத நிலையில், கடன் தொகையை திரும்ப தர முடியாமல் மீனவ பெண்கள் சிரமத்திற்கும், மன உலைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர்.கடன் வசூலிப்பை ஒருமாதம் தளர்த்த, தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என, மீனவ பெண்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X