பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' வைரசை விரட்ட திருத்தணியில் தனி வார்டு திறப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருத்தணி : 'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், அரசு மருத்துவமனையில், கொரோனா வைரசுக்கு தனி வார்டு திறந்து, படுக்கை வசதிகள் ஏற்படுதப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அரசு மற்றும் சுகாதார துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தனி வார்டு அமைத்து, படுக்கை மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராதிகாதேவி கூறியதாவது:கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து, சில பொதுமக்கள் முழுமையாக அறிந்துக் கொள்ளவில்லை. பொதுமக்கள், அவசர சிகிச்சை, தொடர் காய்ச்சல் இருந்தால் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, திருத்தணி அரசு மருத்துவமனையில், தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அளிக்க, 10 படுக்கைகளும், தனிமைப்படுத்துதலுக்கு, 20 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.ஒரு மீட்டர் துாரம் இடைவெளியில் சிகிச்சை முறை கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா வைரசை விரட்ட, திருத்தணி, அரசு மருத்துவமனை தயாராக உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X