பொது செய்தி

தமிழ்நாடு

நாடு திரும்பியோர் விபரம் அளிக்க வேண்டுகோள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருவள்ளூர் : 'கொரோனா' வைரஸ் முன் எச்சரிக்கையாக, மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து யாராவது வந்திருப்பது தெரிந்தால், உடனடியாக தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்குமாறு, கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.வெளிநாடுகளில் இருந்து, வந்துள்ள நபர்கள் சுயமாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, நோய் அறிகுறி வருகிறதா என, கண்காணித்து மருத்துவமனைகளுக்கு சென்று, பரிசோதனை செய்து கொள்ளவும்.

வெளிநாடு சென்று திரும்பிய நபர்களுடன் நேரடி தொடர்பு இல்லை என்றாலும், நோய் தொற்றின் கடுமையை உணர்ந்து, நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளவும்.உங்கள் வசிப்பிட பகுதியிலோ அல்லது உங்கள் ஊரிலோ அல்லது வேறுவழியில் விபரங்கள் அறியும் வகையில், கடந்த, 20ம் தேதிக்கு பின், இன்றைய தினம் வரை எவரேனும் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பது தெரிந்தால், அவரது விபரத்தினை அரசுக்கு தெரிவிக்கவும்.

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு, தொலைபேசியில் 044- 27661200, 'வாட்ஸ் ஆப்' 94443- 17862 ஆகிய வற்றிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X