பொது செய்தி

தமிழ்நாடு

தயக்கத்தில் அரசு அதிகாரிகள் திருப்புவனத்தில் தடை உத்தரவை மீறும் மக்கள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருப்புவனம்;திருப்புவனத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அதனை கண்டு கொள்ளாமல் பலரும் நேற்று பொது இடங்களில் வலம் வந்தனர்.
நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் வலம் வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
ஆனால் திருப்புவனத்தில் அரசின் உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. ஆட்டோ , டூவீலர்கள் என நகர் முழுவதும் போக்குவரத்து செயல்பட்டன. காவல்துறையினரும் ஒருசில இடங்களில் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அரசு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் காவல்துறை, பேரூராட்சி, வருவாய்துறையினரிடம் ஒருங்கிணைப்பு இல்லை. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அது தொடர்பாக எந்த ஆலோசனை கூட்டமும் நடத்தப்படவில்லை.
மளிகை கடைகள் உள்ளிட்டவற்றை சுழற்சி முறையில் திறக்க வலியுறுத்தலாம், விடுமுறை அளிக்கப்பட்டதால் சிறுவர்கள் பலரும் டூவீலர்களில் ஜாலியாக வலம் வந்தனர். கட்டுப்பாடுகளை பொதுமக்களும் பின்பற்றவில்லை, அதிகாரிகளும் அதனை கண்டு கொள்ளவில்லை என்றனர். திருப்புவனத்திற்கு வெகு அருகே மதுரை அண்ணாநகர் உள்ளது. வணிக ரீதியாக தொடர்புள்ள நகர் அது. கொரோனா பாதிப்பால் அங்கு ஒருவர் உயிரிழந்துள்ள போதிலும் அதனை கண்டு கொள்ளாமல் பலரும் டூவீலர்களில் மதுரை சென்று வந்தனர். மக்கள் அரசின் எச்சரிக்கையை கண்டு கொள்ளவேயில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X