பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புத்தூருக்கு மங்களூரிலிருந்து மீன்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருப்புத்துார்:திருப்புத்துாரில் ஊரடங்கு அறிவித்தும்காரணமில்லாமல் பலர் நடமாடுவதைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மங்களூரிலிருந்து மீன் கொண்டு வந்தவர்களை சோதனை நடத்தி சுகாதாரத்துறையினர் திருப்பி அனுப்பினர்.திருப்புத்துாரில் ஊரடங்கு அறிவித்த நிலையில் கிராமங்களிலிருந்து வரும் மக்கள் முழுமையாக வரவில்லை. ஆனால் நகர்புறத்தினர் சிலர் தற்போதும் ரோடுகளில் நடமாடுவதும், டூ வீலர்களில் காரணமில்லாமல் சுற்றுவதும் தொடர்கிறது. போலீசார் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அறிவுரை கூறி வருகின்றனர். கொரோனாவிலிருந்து பாதுகாக்க சமூகத்திலிருந்து தனித்திருத்தல் அவசியத்தை விளக்கினர். அடுத்த கட்டமாக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றனர்.காய்கறி,கறி வியாபாரிகள் தொடர்ந்து வியாபாரம் நடத்துவதாலும் 2 மீட்டர் இடைவெளி விடாமல் வியாபாரம் நடப்பதாலும், அவர்களுக்கும் மருத்துவ சோதனை நடத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். நெருக்கமாக நிற்பதை மேலும் தவிர்க்க காய்கறி,கறி கடைகளை குறிப்பிட்ட இடைவெளி விட்டு பரவலாகஅமைக்க பேரூராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில்நேற்று காலை மீன் மார்க்கெட்டிற்கு மங்களூரிலிருந்து மீனுடன் வந்த வாகனம் குறித்து போலீசார் விசாரித்து எச்சரித்தனர். கீழச்சிவல்பட்டி தனியார் லாட்ஜில் தங்கியிருந்த அதன் டிரைவர் மற்றும் முகவர் ஆகியோருக்கு மருத்துவ பரிசோதனை நடத்திய சுகாதாரத்துறையினர் அவர்களை வெளியேற்றி மங்களூருக்கு அனுப்ப உத்தரவிட்டனர். தொடர்ந்து பல தனியார் லாட்ஜ்களில் சென்று தங்கியிருந்தவர்கள் குறித்து விசாரித்தனர். அதே போல தென்கரையில் நேற்று காலை சந்தை வியாபாரம் நடத்த முயன்றவர்களையும் எச்சரித்து போலீசார் வெளியேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X