பொது செய்தி

தமிழ்நாடு

மருந்துகளை மொத்தமாக பெறுவதில் கால்நடைத்துறை ஊழியர்கள் சிரமம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கையில் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை மொத்தமாக பெற்று செல்வதில் நிலவும் நடைமுறை சிக்கலால் கால்நடைத்துறை ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.கால்நடைத்துறையின் சிவகங்கை மண்டலத்தில் 34, காரைக்குடி மண்டலத்தில் 30 கிளை மருத்துவமனைகள் உள்ளன. மூன்று மாதத்துக்கு ஒரு முறை கால்நடைகளுக்கு தேவையான மருந்து மண்டல அலுவலகங்கள் மூலம் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது ஆண்டின் துவக்கம் அல்லது ஆண்டின் இறுதியில் மருந்துகள் சிவகங்கை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது. பின் கிளைகளில் பணியாற்றும் உதவியாளர்கள் மருந்துகளை வாகனங்களில் எடுத்து செல்கின்றனர். இதற்காக மருத்துவமனைகளை பூட்டி விட்டு நீண்ட துாரத்தில் இருந்து சிவகங்கைக்கு வருகின்றனர். உணவு, பயண செலவு கிடையாது. வாகன செலவு மட்டும் வழங்கப்படுகிறது.நாள் முழுக்க காத்திருந்து மருந்துகளை பெற்று செல்வதற்குள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.சிவகங்கை கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது. ஆண்டு இறுதியில் மருந்துகளை மொத்தமாக அனுப்புகின்றனர். இவற்றை பெற்று செல்வதும் ஊழியர்களின் பணிக்கு உட்பட்டது தான். அந்த நேரத்தில் மருத்துவமனையை டாக்டர் பார்த்து கொள்வார்.கால்நடை ஆய்வாளர், உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஊழியர்கள் நிரப்பப்பட்டதும் சிரமம் தவிர்க்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X