தமிழ்நாடு

மாவட்டத்தின் ஒன்றிய உள்பகுதி முக்கிய சாலைகள்.. மூடல்!

Added : மார் 26, 2020
Share
Advertisement
 மாவட்டத்தின் ஒன்றிய உள்பகுதி முக்கிய சாலைகள்.. மூடல்!

திருப்போரூர் : மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில், ஒன்றிய பகுதிகளின் சாலைகள் மூடப்பட்டன. அத்தியாவசிய தேவைக்கு செல்வோரை தவிர, மற்ற யாரையும், போலீசார் அனுமதிக்கவில்லை.

'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, நாடு முழுவதும், வரும், ஏப்ரல், 15ம் தேத வரை, ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட்டன. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் எல்லைகளும் மூடப்பட்டன.தவிர, பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர, போலீசார், ஒன்றிய பகுதிகளின் சாலைகளையும், நேற்று, மூடினர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில், பேரூராட்சி பகுதியான ஓ.எம்.ஆர்., சாலை, கோவளம் சாலை, கேளம்பாக்கம்- - வண்டலுார் சாலைகள் மூடப்பட்டன.

வாக்குவாதம்:

அதேபோல், திருக்கழுக்குன்றத்தில், மாமல்லபுரம், சட்ராஸ், செங்கல்பட்டு செல்லும் சாலைகளும் மூடப்பட்டன.இவ்வழியில் வரும் ஓரிரு வாகனங்களை நிறுத்தி, கண்காணிப்பு பணியில் உள்ள போலீசார், அவசர தேவைக்கு செல்வோரை மட்டுமே, உரிய விசாரணைக்கு பின் அனுமதித்தினர். மற்றவர்களை திருப்பி அனுப்பினர். தேவையில்லாமல் சாலையில் சுற்றுவோரை எச்சரித்து அனுப்பினர்.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகளில், 26 இடங்களில், போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பாக, காஞ்சிபுரம் நகரில் உள்ள பல இடங்களில், சாலை தடுப்பு அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளை, போலீசார் தடுத்து, வீட்டிற்கு செல்ல அறிவுறுத்துகின்றனர். இதனால், வாகன ஓட்டிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

ஆய்வு:

வழக்கம்போல், அத்தியாவசிய பொருட்களான காய்கனி, இறைச்சி, பழம், மருந்து, பால் உள்ளிட்டவை, பொதுமக்களுக்கு நேற்று கிடைத்தன.போலீசார் மட்டுமல்லாமல், வருவாய் துறையினரும் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்கின்றனர்.தாசில்தார், சப் - கலெக்டர், டி.ஆர்.ஓ., மட்டுமல்லாமல், மாவட்ட கலெக்டர் பொன்னையாவும், பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.

கடைகளில், பொதுமக்கள் சீரான இடைவெளி விட்டு நிற்கின்றனரா என, வருவாய் துறையினர் ஆய்வு செய்கின்றனர்.பஸ், ஆட்டோ, கார், ரயில் என எந்த போக்குவரத்தும் இல்லாததால், மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X