பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவலை தடுக்க அமராவதிபுதூரில் தனி கட்டடம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

காரைக்குடி:காரைக்குடி அமராவதிபுதுார் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம்,அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளகொரோனா சிகிச்சைக்கான தனி கட்டடத்தை கலெக்டர் ஜெயகாந்தன்ஆய்வு செய்தார்.
கொரோனா பரவுவதை தடுக்க அரசு பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில், கொரோனாமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 1ஆம் தேதிக்கு பிறகுவெளிநாட்டிலிருந்து வந்த 2 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு, அவர்கள்வீட்டிலேயே மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை எனஉறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் கொரோனா பாதிப்புஏற்பட்டால் சிகிச்சை வழங்குவதற்கான முன்னேற்பாடுபணிகளை மேற்கொள்ளும் வகையில் அமராவதிபுதுார் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் புதிதாககட்டப்பட்டுள்ள 212 வீடுகள் தயார் படுத்தப்பட்டுள்ளது.இதில், நேற்று வெளிநாட்டில் இருந்து வந்து மருத்துவ பரிசோதனைநடத்துபவர்களுக்கு இக்கட்டடத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கமுன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.அமராவதிபுதுார் அரசுமருத்துவமனை, காரைக்குடி தலைமை மருத்துவமனையில்அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை வார்டுகளையும்கலெக்டர் ஜெயகாந்தன் பார்வையிட்டார்.
ஆய்வின்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை மைய எஸ்.பி.,கிளாரி, கூடுதல் எஸ்.பி., பிரின்ஸ், மருத்துவ இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதார துணை இயக்குநர் யசோதாமணி, மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ரமேஷ், தாசில்தார் பாலாஜி, சாக்கோட்டை பி.டி.ஓ.,திருப்பதிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X