பொது செய்தி

தமிழ்நாடு

மதியம் வரை மார்க்கெட் இயங்கும்; ராஜாஜி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் முடிவு

Added : மார் 26, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஏப்ரல், 14ம் தேதி வரை, காஞ்சி புரம் ராஜாஜி மார்க்கெட், அதிகாலை, 4:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என, காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், ராஜாஜி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு, காய்கறி மற்றும் பலசரக்கு மளிகை கடைகள் இயங்கி வருகின்றன.கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில், தமிழகத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.அதன்படி, பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான காய்கறி, பல சரக்கு மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்கவும், மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசுக்கு முழு ஆதரவு அளிக்கவும், ராஜாஜி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் முடிவு செய்து உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 144 தடை உத்தரவு அமலில் உள்ள ஏப்ரல், 14ம் தேதி வரை, அதிகாலை, 4:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை மட்டுமே, ராஜாஜி மார்க்கெட் செயல்படும்.இதற்கு, வியாபாரிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என, காஞ்சிபுரம் ராஜாஜி அனைத்து வியாபாரிகள் சங்கம் தெரிவித்துஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X