பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட எல்லையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதி

Added : மார் 26, 2020
Share
Advertisement

ஆர்.கே.பேட்டை : ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வேலுார் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லையான சோளிங்கர் சோதனைச்சாவடி வழியாக, நேற்று, இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், வங்கனுார், அத்திமாஞ்சேரிபேட்டை உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, வேலுார் மாவட்டம், சோளிங்கருக்கு தினசரி வந்து செல்கின்றனர்.சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், தங்களின் அன்றாட தேவைகளுக்காக, நேற்று, சோளிங்கருக்கு இருசக்கர வாகனங்களில் சென்று பொருட்களை வாங்கி வந்தனர்.பில்லாஞ்சி அருகே உள்ள சோதனைச்சாவடியில் இருசக்கர வாகனங்கள் மட்டும் கடந்து செல்லும் அளவிற்கு செக்போஸ்ட் தாழ்வாக வைக்கப்பட்டு இருந்தது.அதே நேரத்தில், வழக்கம் போல், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X