பொது செய்தி

தமிழ்நாடு

வெறிச்சோடிய கடலோர பகுதிகள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

மாமல்லபுரம் : மாமல்லபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகள், ஊரடங்கால் முடங்கின.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாமல்லபுரம், சிற்ப வளாகங்கள், கடந்த, 17ம் தேதி மூடப்பட்டன.

தொடர்ந்து, விடுதிகள், ஓட்டல்கள் ஆகியவற்றையும் மூடி, பயணியர் இன்றி, இவ்வூர் வெறிச்சோடியது. இந்நிலையில், மத்திய அரசு, ஊரடங்கு அறிவித்து, நேற்று துவங்கியது. ஏப்ரல், 14ம் தேதி வரை நீடிக்கிறது.காய்கறிகள், மளிகை, மருந்து என, சில கடைகள் மட்டுமே இயங்கி, மற்றவை முடங்கின.கல்பாக்கம், அணுபுரம் நகரியங்களில், பிரதான நுழைவாயிலை மூடி, வெளிநபர் நுழைவு தடுக்கப்பட்டது.

சென்னை அணுமின் நிலையம், குறைவான ஊழியர்களுடன் இயங்குகிறது.கிழக்கு கடற்கரை சாலையில், போக்குவரத்து இன்றி, வெறிச்சோடியது. மாமல்லபுரம், புதுப்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளில், போலீசாரின் நடவடிக்கை இன்றி, இருசக்கர வாகனங்களில், ஏராளமானோர் உலா சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X