பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' தடுப்பு நடவடிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement

பொன்னேரி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, சாலைகளில் கிருமிநாசினி தெளிப்பது, தெருக்களில் பிளீச்சிங் பவுடர் போடுவதில், துாய்மை பணியாளர்கள் சுகாதார பணிகளில் ஈடுபட்டனர்.

ஊரடங்கு உத்தரவுகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கின்றனர்.ஒரு சிலர் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வந்து செல்கின்றனர். தெருக்களில் தேவையின்றி கூட்டமாக நிற்பவர்களை போலீசார் வீடுகளுக்குள் செல்ல அறிவுறுத்தினர்.அதை தொடர்ந்து, அதே செய்கையில் ஈடுபடுபவர்களை விரட்டி அடித்தனர். காய்கறி, மளிகை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தால், உடனடியாக அந்த கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டனர்.

பொன்னேரி பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமையில் துாய்மை பணியார்கள், டேங்கரில் கிருமிநாசினி தயாரித்து, மக்கள் வந்து செல்லும் சாலைகளில் தெளிப்பான் தெளித்தனர்.பிளீச்சிங் பவுடர்சாலைகளில் தேங்கிய குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்தி துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.தடப்பெரும்பாக்கம், அனுப்பம்பட்டு, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் தெருக்களில் பிளீச்சிங் பவுடர் போடப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X