பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்த அவகாசம் பொதுமக்கள் வலியுறுத்தல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருப்புவனம்:கொரோனா வைரஸ் பீதியால் நாடு முழுவதும் வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மானாமதுரை கோட்டத்திற்குட்பட்ட திருப்புவனம், இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட நகரங்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இணைப்புகள் உள்ளன. வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கு மின்கட்டணம் செலுத்த இதுவரை மின்வாரியம் கால அவகாசம் அளித்து உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. திருப்புவனம் நகரில் இம்மாதம் மின்கட்டணம் செலுத்த வரும் ஏப்ரல் 10ம் தேதி கடைசி நாள் ஆக இருக்க வாய்ப்புள்ளது. திருப்புவனம் நகரில் 18 வார்டுகளில்30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் கூலிவேலை செய்பவர்கள். தற்போது அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.திருப்புவனத்தில் வசிக்கும் பலர் மதுரை நகரில் கடைகள், வணிக வளாகங்களில் பணிபுரிகின்றனர். 21 நாள் தடைக்கு பிறகு தான் வேலைக்கு செல்ல முடியும். தனியார் நிறுவனங்கள் தடை உத்தரவு நாட்களுக்கு சம்பளம் தருமா என தெரியாத நிலையில் மின்கட்டணம் பொதுமக்களுக்கு சுமையாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே தமிழக மின்வாரியம் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்து உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X